கட்டிடம் இடிந்து உயிரிழந்த 2 சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி..!!

கட்டிடம் இடிந்து உயிரிழந்த 2 சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி..!!

Update: 2022-01-27 17:49 GMT

கடலூர் அருகே எஸ். புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் பழமைவாய்ந்த இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் வசிக்காததால் கட்டிடம் மோசமடைந்து நிலையில் காணப்பட்டது.இன்று  இந்த வீடுகளுக்கு அருகில் எஸ்.புதூரை சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் வீரசேகர், சுதீஸ்குமார் புவனேஸ்வரன் மற்றும் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கட்டிடம் இடிந்து விழுந்தது.

இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வீரசேகர், சுதீஷ்குமார் 2 பேரும் உயிரிழந்தனர்.

புவனேஸ்வரனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார் .

Similar News