நெகிழ்ச்சி !! இத்தனை ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தை கொரோனா நிதிக்கு அளித்த பீடித் தொழிலாளி

நெகிழ்ச்சி !! இத்தனை ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தை கொரோனா நிதிக்கு அளித்த பீடித் தொழிலாளி

Update: 2021-04-27 11:33 GMT

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் முதல் அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று, 2ஆவது அலையின் தாக்கமும் அங்கு மிகக் கடுமையாக உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 14 லட்சத்து 27 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் கேரள அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்து அதனை வேகமாக கட்டுப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வாங்கும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அம்மாநில மக்கள் ஏராளமானோர் நிதி வழங்கி வருகிறார்கள். 

கேரளாவிலிருந்து மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்தும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வயதான பெண்மணி ஒருவர் தான் வளர்த்து வந்த ஆடுகளை விற்று ரூ.5,000 முதல்வர் நிவாரண நிதியை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் கேரள மாநிலம் கன்னூர் பகுதியை சேர்ந்த பீடித் தொழிலாளி 2 லட்சம் ரூபாயை முதல்வர நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். பீடி தொழிலாளியான சாலடன் ஜனார்த்தனன் வங்கியில் சேமித்து வைத்திருந்த தொகையில் ரூ.2 லட்சம் நிதியை கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். இது அவர் வங்கியில் சேமித்த மொத்த பணத்தில் 99 சதவீதம் ஆகும்.

எனது சேமிப்புகளை விட எனது சகோதர சகோதரிகளின் உயிரே முக்கியம். நான் பீடி சுற்றி அதில் வரும் வருமானத்தில் பிழைத்து கொள்வேன் என்று சாலடன் ஜனார்த்தனன் உருக்கமாக தெரிவித்தார்.
 

newstm.in

Tags:    

Similar News