ரூ. 200 கோடி மோசடி.. நடிகர் கார்த்தி பட நடிகை கைது !!
ரூ. 200 கோடி மோசடி.. நடிகர் கார்த்தி பட நடிகை கைது !!
பல பேரிடம் கோடிக் கணக்கில் ஏமாற்றிய சுகேஷ் சந்திரசேகரின் மனைவியும், நடிகையுமான லீனா மரியா பால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிடிவி தினகரனுக்கு இரட்டை சின்னம் பெற்றுத்தர இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டார் அதன்பின்னர் டெல்லியில் பிரபல தொழிலதிபரிடம் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அதாவது, ‘தொழில் அதிபர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதியிடம் ரூ. 200 கோடி ஏமாற்றியிருக்கிறார்.
அந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் அண்மையில் சென்னையில் உள்ள அவரது சொகுசு பங்களாவில் டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் 16 உயர்தர சொகுசு கார்கள், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதாக அவரது மனைவியும் நடிகையுமான லீனா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
லீனா மரியா பால் கைதை அடுத்து சுகேஷ் சந்திரசேகரின் உதவியாளர்களான கம்லேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் முத்து, மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்லேஷ் கோத்தாரி மூலம் தான் சுகேஷும், லீனாவும் சென்னையில் சொகுசு பங்களா வாங்கியிருக்கிறார்கள்.
லீனா கார்த்தி நடித்த பிரியாணி படத்தில் நடித்திருந்தார். நடிகை ஒருவர் மோசடி புகாரில் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in