ஹெலிகாப்டர் விழுந்த கிராமத்திற்கு ரூ.2.50 கோடி.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

ஹெலிகாப்டர் விழுந்த கிராமத்திற்கு ரூ.2.50 கோடி.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

Update: 2021-12-15 18:00 GMT

குன்னூரில், ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள இரண்டரை கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள நஞ்சப்பசந்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானபோது, அப்பகுதி மக்கள் மீட்புப் பணியில் பல்வேறு உதவிகளை செய்தனர். அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தென் பிராந்திய தலைமை அதிகாரி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இந்த நிலையில், வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இரண்டரை கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, குன்னூர் ஊராட்சி ஒன்றியம் நிதிகளின் கீழ் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதில் பொதுமக்களுக்கு தேவையான நடைபாதை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, சாலை, தடுப்புச் சுவர், குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தொடர் மழையால் பழுதடைந்த வீடுகளின் மேற்கூரைகள் சீரமைக்கப்படுகிறது. குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது.

Similar News