வீட்டுமனை வாங்கித் தருவதாக ரூ.28 லட்சம் மோசடி!!
வீட்டுமனை வாங்கித் தருவதாக ரூ.28 லட்சம் மோசடி!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 28 லட்ச ரூபாய் மோசடி செய்த தொழிலதிபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்த சகோதரர்களான ஜெய்சங்கர் (48), திருக்குமரன் (45) ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம் சென்னை, போரூரை சேர்ந்த பிரகதம்பாள் என்பவர் 1 லட்ச ரூபாய் சீட்டு கட்டினார்.
ஆனால் சீட்டு முதிர்வடைந்த பின்னரும், அவருக்கு பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதற்கிடையில் ஸ்ரீபெரும்புதூரில் வீட்டுமனை வாங்கி தருவதாக, பிரகதம்பாளிடம் 27 லட்சம் வாங்கியுள்ளனர்.
மொத்தம் 28 லட்சத்தை பெற்றுக்கொண்டு நீண்ட நாட்களாகியும் வீட்டுமனை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பிரகதம்பாள், காஞ்சிபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில் ஜெய்சங்கர், திருக்குமரன் ஆகியோர் மோசடி செய்தது தெரிந்தது. இதையறிந்த ஜெய்சங்கர், தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து போலீசார், திருக்குமரனை கைது புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஜெய்சங்கரை போலீசார் தேடிவருகின்றனர்.
newstm.in