இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை! அதிரடி தேர்தல் அறிக்கை!!

இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை! அதிரடி தேர்தல் அறிக்கை!!

Update: 2022-01-17 07:28 GMT

கோவா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 13 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சியின்  தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.

கோவாவில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட உள்ள ஆம் ஆத்மி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் ஆட்சிக்கு வந்தால் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலை வாய்ப்பு மேம்படுத்தப்படும் என்றும், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இலவச குடிநீர், இலவச மின்சாரம், அரசு பள்ளிகள் மூலம் இலவச கல்வி ஆகிய வாக்குறுதிகளையும் ஆம் ஆத்மி கட்சி வழங்கியுள்ளது. சுகாதார கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு இலவச மருத்துவம் அளிக்கப்படும் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது

ஆம் ஆத்மி கட்சியின் கவர்ச்சிகர அறிவிப்புகள் மூலம் கோவா தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு கடும் போட்டியை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 மாநில தேர்தலை நாடே உற்று நோக்கி இருக்கும் வேளையில் இதுபோன்ற தேர்தல் வாக்குறுதி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், கோவாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அனைவர்க்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்,  தரமான கல்வி மற்றும் மருத்துவ சேவை அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

newstm.in

Similar News