ரூ.3,00,00,000/- கோடி பரிசு! முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
ரூ.3,00,00,000/- கோடி பரிசு! முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைத்தார்,
தமிழகத்தில் மொத்தம் உள்ள 18,000 விளையாட்டு வீரர்களில் 10000 பேர் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் ஊக்கத்தொகையையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
விளையாட்டுத் துறையை மேன்மைமிக்க துறையாக உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) June 26, 2021
வீரர்களை ஊக்கப்படுத்தி, நவீன கட்டமைப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டை - இந்திய துணைக்கண்டத்தை உலக விளையாட்டரங்கில் முக்கியத்துவம் பெறச் செய்திட அனைத்து முன்னெடுப்புகளையும் அரசு மேற்கொள்ளும்! pic.twitter.com/zoXfkuB2VT
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளி வெல்பவர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.