இவர்களிடம் ரூ.4.83 லட்சம் வசூல்.. சென்னை மாநகராட்சி அதிரடி..!

இவர்களிடம் ரூ.4.83 லட்சம் வசூல்.. சென்னை மாநகராட்சி அதிரடி..!

Update: 2022-01-06 14:30 GMT

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த வகையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தலா 3 குழுக்கள் வீதம் அமைக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழுக்களில் காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து செயல்படுகின்றனர்.

இந்தக் குழுவினர், சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று (5ம் தேதி) ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 2,286 பேரிடம் இருந்து 4.83 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

மேலும், கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி முதல் தற்போது வரை, முகக்கவசம் அணியாத பொதுமக்களிடமிருந்து 12.54 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Similar News