காட்டுத்தீயை அணைக்க வந்த ரஷ்யா விமானம் நொறுங்கி விபத்து..!!

காட்டுத்தீயை அணைக்க வந்த ரஷ்யா விமானம் நொறுங்கி விபத்து..!!

Update: 2021-08-16 04:05 GMT

துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள பெர்டிஸ் ஏற்பட்ட காட்டுத் தீ ஏற்பட்டது. இதனை அணைக்க உதவுவதற்காக ரஷ்யாவில் இருந்து பிஇ-200 ரக தீயணைப்பு விமானம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த விமானத்தில் ரஷ்ய ராணுவத்தின் 5 விமானிகள் மற்றும் 3 துருக்கி நாட்டு நிபுணர்கள் என மொத்தம் 8 பேர் பயணித்தனர்.

இந்நிலையில் தண்ணீரை வனப்பகுதியில் ஊற்றுவதற்காக விமானம் சென்று கொண்டிருந்த போது, புகை மூட்டம் காரணமாக அங்கிருந்த மலைமுகட்டில் மோதி பெரிவ் விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News