மீண்டும் மோதும் சச்சின், லாரா! 20 ஓவர் போட்டிகள் அறிவிப்பு!
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கி இம்மாதம் 16ம் தேதி வரையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டித் தொடருக்கான விளம்பர தூதராக கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் நடைப்பெற இருக்கும் இந்தப் போட்டிக்கான முதல் சீசனில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் (இந்தியா), பிரையன் லாரா, சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்), பிரெட்லீ (ஆஸ்திரேலியா), ஜான்டி ரோட்ஸ் (தென்ஆப்பிரிக்கா), முரளிதரன், தில்ஷன் (இலங்கை) உள்ளிட்ட 110 முன்னாள் வீரர்கள் கலந்துக் கொள்கிறார்கள்.
தங்கள் அபிமான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் களத்தில் எதிரெதிரே மோதிக் கொள்வதைக் காண உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள், காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய், சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in