சச்சின் தலைமையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர்! முன்னணி வீரர்கள் பங்கேற்பு!

இந்திய கிரிக்கெட்டின் காட்பாஃதர் என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் உலக அளவில், கிரிக்கெட் விளையாட்டுகளில் அதிக ரன்களை குவித்தவர், அதிகமான சதங்களை அடித்தவர் என்பது உள்ளிட்ட பல சாதனைகளை சொந்தமாக்கியுள்ளார்.

Update: 2020-02-03 22:23 GMT

இந்திய கிரிக்கெட்டின் காட்பாஃதர் என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் உலக அளவில், கிரிக்கெட் விளையாட்டுகளில் அதிக ரன்களை குவித்தவர், அதிகமான  சதங்களை அடித்தவர் என்பது உள்ளிட்ட பல சாதனைகளை சொந்தமாக்கியுள்ளார்.

கிரிக்கெட் உலகில் சச்சினின் பல சாதனைகள் தற்போது தகர்க்கப்பட்டு வந்தாலும், இன்னும் பல்வேறு சாதனைகள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சினுக்கு சொந்தமாக தான் உள்ளன. சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து விடைப்பெற்ற பின்னர், பலர் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதையே விட்டொழித்தனர் என்கிற அளவிற்கு உலகம் முழுவதும் சச்சினின் ரசிகர்கள் நிறைந்துள்ளனர். 

இந்நிலையில், இந்தியாவின் முக்கிய நகரங்களில், சாலை பாதுகாப்பை வலியுறுத்தி, கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்களான சச்சின், ஷேவாக், லாரா, சந்தர்பால், முரளிதரன், தில்ஷன் உள்ளிட்ட 110 வீரர்க்ள் பங்கேற்கும் 20 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர் நடைப்பெற்று வருகிறது. பிப்ரவரி 16ம் தேதி வரையில் நடைப்பெற இருக்கும் இந்தப் போட்டித் தொடருக்கான விளம்பர தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 
இந்தப் போட்டித் தொடர் மூலமாக கிடைக்கும் வருமானம் சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News