கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே சம்பளம்.. அரசு திடீர் அறிவிப்பால் பரபரப்பு !!
கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே சம்பளம்.. அரசு திடீர் அறிவிப்பால் பரபரப்பு !!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தடுப்பூடு போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசி போடுவதற்கு பலரும் வதந்திகள் காரணமாக தடுப்பூசி செலுத்த மறுத்து வருகின்றனர். ஆனால் அரசு தரப்பில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சத்தீஸ்கா் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியா்களுக்கான சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் பழங்குடியினா் நலத்துறை அதிகாரி அறிவித்துள்ளாா். ஆனால் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் விமா்சனமும் எழுந்துள்ளது.
இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ள கௌரிலா மாவட்ட பழங்குடியினா் நலத்துறை இணை ஆணையா் கே.எஸ்.மாஸ்ராம் கூறுகையில், மாவட்டத்தில் பழங்குடினா் நலத்துறை அலுவலகங்கள், மாணவா்கள் உறைவிடப் பள்ளிகள், விடுதிகள் என பல இடங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஊழியா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அனைவருக்குமே பாதுகாப்பானது.
எனவேதான், இதுபோன்ற உத்தரவை பிறப்பித்ததாகவும் தடுப்பூசி செலுத்தாவிட்டால் அடுத்த மாதத்தில் இருந்து சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவித்தார். இதனால் தற்போது 95 சதவீதம் போ் தடுப்பூசி போட்டுக் கொண்டனா். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனாவை ஒழிக்க முடியும் என்ற நோக்கத்தில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.
newstm.in