சல்மான் கான் தாராளம்.. சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.3,75,00,000 நிதியுதவி !!

சல்மான் கான் தாராளம்.. சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.3,75,00,000 நிதியுதவி !!

Update: 2021-05-08 11:57 GMT

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீரியமியக்கதாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு துறைகள், நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  கோடிகணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். 

அந்த வகையில் கொரோனாவால் சினிமா தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன, சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சினிமா சார்ந்த தொழிலாளர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோல், கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலையிலும் தொழிலாளர்கள் பாதித்தனர். அப்போது திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தார்கள். தற்போது மீண்டும் அப்படி ஒரு பாதிப்பு நிலை ஏற்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள். தற்போது அவர்களுக்காக இந்தி நடிகர் சல்மான் நிதியுதவி பெரும் தொகை நிதியுதவி அளிக்கிறர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களக்கு ரூ.3,75,00,000 நிதியுதவி அளிக்க சல்மான் கான் முன்வந்துள்ளார்.

இது குறித்து இந்திய மேற்கு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் திவாரி கூறுகையில், சினிமா தொழிலாளர்கள் பலரது பெயரை சல்மான் கானிடம் வழங்கியுள்ளோம். சல்மான் கான் 25,000 தொழிலளார்களுக்கு தலா 1500 ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் 35 ஆயிரம் மூத்த தொழிலளார்கள் பெயர்ப் பட்டியலை அளித்துள்ளோம். 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு மாத உதவித் தொகையாக 5000 ரூபாய் வழங்க அவர்கள் சம்மதித்துள்ளார்கள். தொழிலளார்களின் வங்கிக் கணக்குகளை உறுதி செய்தபின் நேரடியாக அவர்களது கணக்கிலேயே பணத்தை செலுத்திவிடுவார்கள் என தெரிவிக்ககப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News