த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட்டடித்த ‘96' படத்தை அதே இயக்குநர் பிரேம் குமார், தெலுங்கில் ‘ஜானு' எனப் பெயரிட்டு இயக்கி வருகிறார்.

 

Full View

த்ரிஷா கேரெக்டரில் நடிகை சமந்தாவும், விஜய் சேதுபதி கேரெக்டரில் ‘எங்கேயும் எப்போதும்' புகழ் ஷர்வானந்தும் நடித்துள்ளனர். தமிழில் இசையமைத்த கோவிந்த் வசந்தா தெலுங்கு ரீமேக்கிலும் இசையமைத்துள்ளார்.

வரும் பிப்ரவரி 7ம் தேதி ஜானு படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

த்ரிஷாவா, சமந்தாவா யார் 90 கிட்ஸ் கதாநாயகி என்கிற போட்டி ட்ரைலருக்கான கமெண்டில் நிரம்பி வழிகிறது!

newstm.in

Tags: