தனது திருமண வாழ்க்கைக்கு தானே வேட்டு வைத்த சமந்தா.. ஆசை யாரை விட்டது !!
தனது திருமண வாழ்க்கைக்கு தானே வேட்டு வைத்த சமந்தா.. ஆசை யாரை விட்டது !!
சமந்தாவும், பிரபல நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். தெலுங்கு திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக இவர்கள் பார்க்கப்பட்டனர். வெளிநாடுகளுக்கு பறந்த இவர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் போட்டுவந்தனர்.
இந்நிலையில் சமந்தா- நாக சைதன்யா இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். எனினும் இதனை இருவரும் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் குடும்ப நீதிமன்றத்தில் பலமுறை கவுன்சிலிங் பெற்றும் மனம் மாறவில்லையாம். மாமனார் நாகர்ஜுனாவின் முயற்சியும் தோல்வி அடைந்துவிட்டதாம்.
மேலும் விவாகரத்து தான் ஒரே வழி என்கிற முடிவுக்கு இருவரும் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. சமந்தா தன் கெரியரை அதிகம் விரும்புகிறார். அதாவது கவர்ச்சியாக நடிப்பதும், போட்டோஷூட்டுகள் நடத்துவது சமந்தாவுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், ஆனால் அதற்கு மாமனார் நாகர்ஜுனா, கணவர் நாக சைதன்யா எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சமந்தாவின் திருமண வாழ்க்கை விவாகரத்து வரை வந்துவிட்டது. அடுத்த மாதம் சமந்தாவின் நான்காவது திருமண நாள் வருகிறது. ஆனால் சமந்தாவும், நாக சைதன்யாவும் ஏற்கனவே தனித் தனியாக வாழ்கிறார்கள். இதற்கிடையே பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறாராம் சமந்தா. இதனால் விரைவில் ஹைதராபாத்தை காலி செய்துவிட்டு மும்பையில் செட்டில் ஆகும் திட்டத்தில் இருக்கிறாராம்.
newstm.in