சரவண பவன் நிர்வாகம் மிரட்டல் - மேலாளர் தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று சரவணபவன் கிளைகளுக்கு மேலாளராக பழனியப்பன் என்பவர் பணியாற்றிவந்தார். கடந்த சில மாதங்களாக, ஊழியர்களுக்கு சரவண பவன் நிர்வாகம் சரியாக சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து, பழனியப்பன் சென்னை தலைமை அலுவலகத்தில் பேசிய போது, அடுத்த மாதம் சேர்த்துக் கொடுத்துவிடலாம் என கூறினர்.
காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று சரவணபவன் கிளைகளுக்கு மேலாளராக பழனியப்பன் என்பவர் பணியாற்றிவந்தார். கடந்த சில மாதங்களாக, ஊழியர்களுக்கு சரவண பவன் நிர்வாகம் சரியாக சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து, பழனியப்பன் சென்னை தலைமை அலுவலகத்தில் பேசிய போது, தற்போது நிர்வாகத்தில் சில பிரச்னைகள் இருப்பதால், அடுத்த மாதம் சேர்த்துக் கொடுத்துவிடலாம் என கூறினர்.
ஆனால் ஊழியர்கள், பழனியப்பன் சொல்வதை ஏற்காமல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தைத் தடுப்பதற்காக, 600 ஊழியர்களுக்கும் சம்பளத் தொகையில் இருந்து முன்பணமாக 5000 ரூபாய் கொடுத்தார் பழனியப்பன். இதனையடுத்து சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து பழனியப்பனை நேரில் அழைத்த நிர்வாகத்தினர், முன்பணம் கொடுத்ததற்காக திட்டியும், மிரட்டியும் உள்ளனர்.
இதனால் மனமுடைந்த பழனியப்பன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று சரவண பவன் கிளையின் ஊழியர்களும் பணியை புறக்கணிப்பு செய்து, காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள சரவண பவன் உணவகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த பழனியப்பன் குடுப்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும், இரண்டு மாத சம்பள பாக்கியை உடனே கொடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in