எம்ஜிஆர் இல்லத்தில் சசிகலா உண்ணாவிரதம்?
எம்ஜிஆர் இல்லத்தில் சசிகலா உண்ணாவிரதம்?
அதிமுகவில் ஒற்றைத் தலைமை அல்ல, மீண்டும் இரட்டை தலைமை தான் என்ற நோக்கில் ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் விநியோகம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது, யார் ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட வந்தாலும் சிறப்பு கவனிப்பு கொடுங்கள் என்று அதிமுக தலைமை தொண்டர்களை தயார் செய்து வைத்திருந்தது.
அதனால் தான் வேட்புமனு கேட்டு போன ஓமபொடி பிரசாத் சிங்கை அங்குள்ளவர்கள் தாக்கினர். எனவே போட்டியில்லாமல் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் பழையபடி தங்களது பதவிகளை தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் சசிகலா எந்நேரத்திலும் கட்சி அலுவலகத்துக்கு வந்து வேட்பு மனுவை கேட்பார் என தகவல்கள் வெளியானது. உடனடியாக ஓபிஎஸ் , இபிஎஸ் தரப்பு தொண்டர்களை உஷார்படுத்தினர்.
அதிமுக தலைமை அதுவும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ச்சியாக தனது பலத்தை காட்டி வரும் நிலையில் சசிகலா என்ன தான் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.
ஆதரவாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக உண்ணாவிரதம் இருக்கலாம் என்று சசிகலாவுக்கு யோசனை கூறப்பட்டுள்ளதாம். இது குறித்து தனது வழக்கறிஞர்களிடம் சசிகலா பேசி வருகிறார் என்கிறார்கள்.
ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கலாமா அல்லது தியாகராய நகர் எம்ஜிஆர் இல்லத்தை தேர்வு செய்யலாமா என்ற பேச்சும் உள்ளதாக தெரிகிறது. அதனால் சசிகலாவின் அடித்த மூவ் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
newstm.in