ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மேல் சந்தேகம் உள்ளது: ஜெ.தீபா பேட்டி

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மேல் சந்தேகம் உள்ளது: ஜெ.தீபா பேட்டி

Update: 2021-12-11 06:30 GMT

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகளான அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியது செல்லாது, என்றும் மூன்று வாரத்தில் வீட்டின் சாவியை மனுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில் வேதா இல்லத்தின்  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.தீபா மற்றும் தீபக் இடம் ஒப்படைத்தார்.

இதனையடுத்து.இருவரும் வேதா இல்லத்திற்கு வருகை தந்து கோட்டாச்சியர், வட்டாச்சியர் முன்னிலையில் உள்ளே சென்று வீட்டிற்குள் அனைத்து அறைகளையும் 3 மணி நேரமாக பார்வையிட்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா கூறுகையில்,

“ஜெயலலிதா பெயரில் விரைவில் அறக்கட்டளை தொடங்கப்பட உள்ளதாகவும் ஆனால் இந்த வீட்டை அறக்கட்டளையாக மாற்றும் எண்ணம் இல்லை என கூறினார். இந்த வீட்டிற்கு குடிபெயர வேண்டும் என்று தான் என்னுடைய ஆசை, ஆனால் இந்த வீட்டிற்கு பாரமரிப்பு பணிகள் நிறைய உள்ளது. அதை எல்லாம் செய்ய வேண்டும் என்றார்.

மேலும் அதிமுக சார்பில் வேதா நிலையம் தொடர்பாக மேல்முறையீடு செய்தால் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளதாகவும் இந்த வீட்டை  அரசுடமையாக்கினால் அரசுக்கு எந்த பயனும் இல்லை என கூறினார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக  உரிய விசாரணை வேண்டும், இந்த வீட்டை பார்த்தாலே எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது எனவும் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக சசிகலா மேல்  சந்தேகம் உள்ளது அவரையும்  விசாரிக்க வேண்டும். எனக் கூறிய அவர், மரணம் தொடர்பான விசாரணையை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும்” என்றார்.

Similar News