ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார் சசிகலா!

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார் சசிகலா!;

Update: 2021-10-16 12:30 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையானார். சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுகவுக்கு பெரும் இடையூறாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்ட சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

இந்நிலையில், எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அதிமுக தனது பொன்விழா ஆண்டில் காலடி எடுத்து வைக்க உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா இன்று சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி கண்ணீர் செல்க மரியாதை செலுத்தினர்.

சசிகலா வருகையால் அவரது ஆதரவாளர்கள் அதிகளவில் ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் திரண்டனர். முன்னதாக, வழக்கம் போல அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

சிறைக்கு செல்வதற்கு முன்னால் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டுச் சென்ற சசிகலா, 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தார். 

சிறையில் இருந்து வந்த பிறகு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது இதுவே முதல் முறையாகும். 

Tags:    

Similar News