சசிகலா ரீலிஸ் ! கர்நாடகா சிறைத்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல் !!

சசிகலா ரீலிஸ் ! கர்நாடகா சிறைத்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல் !!

Update: 2021-01-25 16:30 GMT

சசிகலா வரும் 27 -ம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதி என கர்நாடகா சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய தண்டனைக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அபராதத் தொகையை அவர் செலுத்தியுள்ளதால் ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என கூறப்பட்டது. விசாரணையின் போது 129 நாட்கள் சசிகலா சிறையில் இருந்ததால் அந்த நாட்களை தண்டனைக் காலத்தில் கழித்துக் கொள்ள வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் சசிகலா தரப்பு கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் ஜனவரி 29 -ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல் வெளியானதால் அவரை வரவேற்க அமமுகவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர்.சிறைக்கு சென்ற போது சசிகலா மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று சபதம் செய்தார். அதே போல் சிறையில் இருந்து வரும் சசிகலா நேராக மெரினா கடற்கரைக்கு சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் சபதம் ஏற்பார் என்று தகவல் வெளியானது. 

ஆனால், திடீர் திருப்பமாக, சசிகலா உடல் நலம் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், சசிகலாவுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது. இதை தொடர்ந்து சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா உடல் நலம் தேறிவருவதாக மருத்துவமனை நிர்வாகம்  தெரிவித்திருந்தது. இந்நிலையில், சசிகலா வரும் 27 -ம் தேதி  விடுதலை செய்யப்படுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News