அடுத்த ஆடியோ வெளியிட்டார் சசிகலா...!!
அடுத்த ஆடியோ வெளியிட்டார் சசிகலா...!!
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடம் இருந்து அதிமுகவை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கையிலெடுத்துள்ளார். இதை அதிமுக தலைமைக்கு தெரியப்படுத்தும் விதமாக தொண்டர்களிடம் பேசி, அந்த ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ், “சசிகலாவிடம் பேசுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்” என அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி, இதுவரை பல நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கூட, 5 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
இருப்பினும், அதிமுக தொண்டர்களிடம் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. “தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள்; என்ன தான் தீர்மானம் நிறைவேற்றினாலும், தொண்டர்களை என்னுடன் பேச விடாமல் தடுக்க முடியாது” என சசிகலா கூறி வருகிறார்.
தொண்டர்களின் தியாகத்தினால்தான் கட்சி மாபெரும் சக்தியாக உள்ளது. தொண்டர்களை நீக்குவது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக நான் வருவேன். அம்மா போல நானும் கட்சியை வழி நடத்துவேன். தொண்டர்களின் ஆதரவோடு அதை செய்வேன்” என்று கூறியுள்ளார்.