மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி!

Update: 2021-12-05 18:33 GMT

தமிழ்நாடு அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா தனது 68 வயதில் உயிரிழந்தார்.

இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சசிகலா ஏராளமான தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Similar News