நல்ல வரன் கிடைக்க இதை சொல்லுங்க! கை மேல் பலன் கிடைக்கும்!

நல்ல வரன் கிடைக்க இதை சொல்லுங்க! கை மேல் பலன் கிடைக்கும்!;

Update: 2021-03-06 06:47 GMT



அபிராமி அந்தாதி


அதிசயமான வடிவுடையாள்! அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி! துணை இரதி
பதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே.

பொருள்

அபிராமி வியக்கத்தக்க வடிவத்தை உடையவள். தாமரை மலர்கள் யாவும் துதி செய்யும் அழகினை உடையவள். ரதியின் மணாளனான மன்மதன் அழிவதற்கு காரணமான நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமானையே தன் கண்களால் வசமாக்கி அவர் தம் இடப்பாகத்தை பெற்றவள் எனதுஅன்னை அபிராமியே.!
அன்னையின் அழகை ஆராதித்து மனதில் மனமுருகி பிரார்த்தனை செய்து வர கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமையும் என்பது ஐதிகம்.

Tags:    

Similar News