திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி கேட்கும் எஸ்.பி.வேலுமணி..!!

திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி கேட்கும் எஸ்.பி.வேலுமணி..!!

Update: 2022-02-01 04:35 GMT

நீலகிரி மாவட்டம் உதகையில் அதிமுகவின் உள்ளாட்சி தேர்தலுக்கான கலந்தாலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர், நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்களிடையே அதிமுகவின் திட்டங்களை கூறி வேட்பாளராக களம் காண்போருக்கு வெற்றியைத் தேடித் தரவேண்டும் என கேட்டுக் கொண்டார். அதிமுக செய்த பல்வேறு திட்டங்களை தான் திமுக கதற்போது செய்ததாக கூறி வருகிறது.

தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக அதை நிறைவேற்றி உள்ளதா? இதுவரை இல்லை எனவும், அதேபோல் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறினார்கள்.
 
இதுவரை எதையும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வால் இதுவரை இல்லாத அளவில் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவராகி இருக்கின்றனர் எனவும் அதற்கு அதிமுக மட்டுமே காரணம் எனக் கூறினார்.

மேலும் நீலகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பை ஏற்படுத்தி கொடுத்தது அதிமுக அரசுதான் என்றார்.

அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்பு 2,000 வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருளை கொடுத்து மக்களை ஏமாற்றியது மட்டுமே திமுகவின் சாதனை என தெரிவித்தார்.

Similar News