மதம் மாறிய மாணவர்களுக்கு உதவித்தொகை.. விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்..!
மதம் மாறிய மாணவர்களுக்கு உதவித்தொகை.. விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்..!
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலாண போஸ்ட் மெட்ரிக் (10-ம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்) கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் ஆகிய திட்டங்களுக்குரிய இணையதளம் அறிமுகம் செய்துள்ளது.
மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணவ- மாணவியரிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதே போல், மத்திய அரசு நிதி ஆதரவிலான ஃப்ரி மெட்ரிக் (9 மற்றும் 10-ம் வகுப்புகள்) கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான இணையதளம் திறக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் இன மாணவ- மாணவியரிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவ- மாணவியர் தமது கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதி சான்று, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்புக் கணக்குப் புத்தக நகல், ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் வரும் 13-ம் தேதிக்குள் http://escholarship.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள், மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்திடவும், விண்ணப்பங்களை எவ்வித தவறுகளுமின்றி பதிவேற்றம் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.