பள்ளி மாணவர்களுக்கு இனி வெள்ளி விடுமுறை கிடையாது..!

பள்ளி மாணவர்களுக்கு இனி வெள்ளி விடுமுறை கிடையாது..!

Update: 2021-12-21 11:36 GMT

லட்சத்தீவு பகுதியில் அதிகமாக இஸ்லாமியர்கள் உள்ள நிலையில் அங்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், லட்சத்தீவில் இனி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது; அதற்கு பதில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்று லட்சத்தீவு கல்வித்துறை அறிவித்துள்ளது.

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் லட்சத்தீவில் பல ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை விடுமுறையை நிர்வாகம் ரத்து செய்ததால் மாணவர்கள் மட்டுமின்றி அங்கு வாழும் மக்களும் பெரும் அதிருப்தியில் காணப்படுகின்றனர்.

Similar News