பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதால் வேலையை இழந்த பள்ளி ஆசிரியர்!!

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதால் வேலையை இழந்த பள்ளி ஆசிரியர்!!

Update: 2021-10-27 05:40 GMT

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி க்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. சூப்பர்-12 சுற்று போட்டியில் தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் பணிபுரிந்து வரும் நபீசா அட்டாரி என்ற ஆசிரியை டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

இந்த தகவல் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவர, நபீசா அட்டாரி பாகிஸ்தானுக்கு ஆதரவாக  சமூகவலைதளத்தில் செய்தி பரப்பிய காரணத்தை சுட்டிக்காட்டி அவரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

Tags:    

Similar News