பள்ளி மாணவிகள் தற்கொலை சம்பவம் தொடர்வது வேதனை அளிக்கிறது..!!
பள்ளி மாணவிகள் தற்கொலை சம்பவம் தொடர்வது வேதனை அளிக்கிறது..!!
சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் இருந்த மாணவி, திடீரென தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் 3 கடிதங்கள் சிக்கின.
மாணவியின் செல்போன், கடிதம் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
சென்னை மாங்காட்டில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பற்றி தமிழ்நாடு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையிலும், பள்ளி மாணவிகள் தற்கொலை சம்பவம் தொடர்வது வேதனை அளிக்கிறது. மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு அளிக்கிறோம். அவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், மாணவிகள் பிரச்சினைகள் குறித்து பெற்றோரிடம் பேசுங்கள் என்றும், தயவு செய்து தற்கொலை முடிவு எடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டார்.