பேருந்து நிலையத்தில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட பள்ளி மாணவிகள் ! அதிர்ச்சி வீடியோ !

பேருந்து நிலையத்தில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட பள்ளி மாணவிகள் ! அதிர்ச்சி வீடியோ !

Update: 2021-12-09 05:45 GMT

பேருந்து நிலையத்தில் மாணவிகள் இரு குழுக்களாக பிரிந்து கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கையும் ஒரு புறம் எடுக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் சில மாணவர்கள் அரங்கேற்றி வரும் அத்துமீறல்களை பெற்றோர் மட்டுமின்றி பொதுவெளியில் செல்கின்ற பொதுமக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், ஆவடி அருகே மாணவிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஆவடி பேருந்து நிலைய பணிமனையில் மாணவிகள் ஏராளமானோர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த மாணவிகள் சிலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் திடீரென மாணவிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். மாணவிகள் மோதலில் ஈடுபட்ட சம்பவத்தை கண்ட பொதுமக்கள் சிலர் சிதறி ஓடினர். மேலும் சண்டையிட்டுக் கொள்ளும் மாணவிகளை பொதுமக்கள் சமாதானம் செய்தாலும் கட்டுப்படுத்த  முடியவில்லை. 

மாணவிகள் மோதல் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு செல்கின்ற மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் பாடப்புத்தங்களை படித்தாலே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர். 

இதனிடையே, பேருந்து நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட மாணவிகள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பள்ளி மாணவிகள் மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



 

newstm.in

Similar News