9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு! மாநில அரசு முடிவு!

9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு! மாநில அரசு முடிவு!

Update: 2021-08-15 18:59 GMT

கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியா முழுவதுமே மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பாடம் படித்து வருகின்றனர். இதற்கிடையே அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டு பொதுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது கொரோனா 2ஆவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் பாசிட்டிவிட்டி ரேட் 2 சதவீதம் கீழ் உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை திறக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பள்ளிகளுக்கு நுழையும் மாணவர்களின் பெற்றோரும், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாக பெற்றோர் பலரும் தெரிவித்து வருகின்றனர். அதனாலேயே நாடு முழுவதும் பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் தயாராகி வருகின்றன.

Tags:    

Similar News