அனுமதியின்றி செயல்பட்டுவந்த குடிநீர் ஆலைகளுக்கு சீல்

குன்றத்தூர் பகுதியில் மொத்தம் 64 குடிநீர் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் மூன்று குடிநீர் ஆலைகள் உரிய அனுமதி பெறாமல் செயல்படுவதாகவும், அதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் குடிநீர் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தர்.

Update: 2020-02-29 00:15 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த நான்கு குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 


குன்றத்தூர் பகுதியில் மொத்தம் 64 குடிநீர் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் மூன்று குடிநீர் ஆலைகள் உரிய அனுமதி பெறாமல் செயல்படுவதாகவும், அதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் குடிநீர் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தர். 


இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ  அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஆலைகளுக்கு சீல் வைத்தார். இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உரிய அனுமதி இன்றி இயங்கி வந்த ஒரு குடிநீர் ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது. 
 

newstm.in

Tags:    

Similar News