மலையாள நடிகையுடன் இரண்டாவது திருமணம்.. வில்லன் நடிகருக்கு பிரபலங்கள் வாழ்த்து !!
மலையாள நடிகையுடன் இரண்டாவது திருமணம்.. வில்லன் நடிகருக்கு பிரபலங்கள் வாழ்த்து !!
தமிழ் திரையுலகில் வில்லன் நடிகராகவும், துணை நடிகராகவும் அறியப்படுபவர் ஹரிஷ் உத்தமன். ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இவர் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவரின் பூர்வீகம் கேரளா.
கடந்த 2010-ம் ஆண்டு வெளியான 'தா' என்ற படம் மூலமாக இயக்குநர் சூரிய பிரபாகரன் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். இந்தப் படத்துக்காக நார்வே திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் பெற்றார் ஹரிஷ். அதனை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'பாண்டியநாடு' படம் மூலமாக பிரபலமானார். இதில் இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது.
அதன்பின்னர் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவியத் துவங்கின. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தனி ஒருவன்' படத்தில் துணை நடிகராக நடித்த ஹரிஸ், 'பாயும் புலி', 'றெக்க', 'தொடரி', 'பைரவா', 'டோரா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஹரிஸ் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான ஒரு ஆண்டில் இவர்கள் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இந்நிலையில்தான் தற்போது ஹரிஷ், மலையாள நடிகை சின்னு குருவிலா என்பவரைத் காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சின்னு குருவிலா ஃபகத் பாசில் நடிப்பில் தேசிய விருது வென்ற திரைப்படமான 'நார்த் 24 காதம்', மம்மூட்டியின் 'கஸபா', லுக்கா சுப்பி போன்ற ஒருசில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் கேரளாவின் மாவேலிகராவில் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும், இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து கூறி வருகின்றனர்.
newstm.in