இரண்டாவது டி20: இந்த முறையும் டாஸ் வென்ற இந்தியா !! நியூசிலாந்து பலப்பரீட்சை !!
இரண்டாவது டி20: இந்த முறையும் டாஸ் வென்ற இந்தியா !! நியூசிலாந்து பலப்பரீட்சை !!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஜெய்ப்பூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2ஆவது 20 ஓவர் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. இந்திய அணியில் ஹர்ஷல் படேல் தனது அறிமுக ஆட்டத்தில் களம் காண்கிறார். முதல் ஆட்டத்திலும் டாஸ்வென்று இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
அணி வீரர்கள் விபரம்:
நியூசிலாந்து : மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டிம் சீஃபர்ட், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி (கே), ஆடம் மில்னே, டிரென்ட் போல்ட்.
இந்தியா: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா(கே), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல்