சைக்கிளிங் சென்ற முதலமைச்சருடன் செல்பி.. பிரபல நடிகை புகைப்படம் வைரல் !!

சைக்கிளிங் சென்ற முதலமைச்சருடன் செல்பி.. பிரபல நடிகை புகைப்படம் வைரல் !!

Update: 2021-07-04 18:56 GMT

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பொதுவாக உடற்பயிச்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். தினமும் நடைபயிற்சியில் ஈடுபடுவார் என அவருடன் நெருக்கமாக இருப்பவர்கள் கூறுவர். மேலும் சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் மேற்கொள்வதை விடாமல் செய்து வருகிறார். 

தற்போது முதல்வர் ஆன பிறகும், பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் தனது உடற்பயிற்சியை அவர் கைவிடவில்லை. அன்மையில் ஜிம்மில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் இன்று காலை அவர் சைக்கிளிங் சென்ற வீடியோ, புகைப்படங்கள் மீண்டும் வைரலாகி வருகின்றன. கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றார் மு.க.ஸ்டாலின். வழிநெடுக போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான இந்த சைக்கிள் பயணத்தில் அவரது நண்பர்கள் சிலரும் பங்கேற்றனர். 

இந்நிலையில் சைக்கிளிங் சென்ற முதல்வருடன், நடிகை யாஷிகா ஆனந்த் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் லைக்குகளும் குவிந்து வருகிறது.


newstm.in

Tags:    

Similar News