தமிழ்நாட்டு அரசியலின் மூத்த தலைவர் மருத்துவமனையில் அனுமதி ..!!

தமிழ்நாட்டு அரசியலின் மூத்த தலைவர் மருத்துவமனையில் அனுமதி ..!!

Update: 2022-01-08 22:08 GMT

பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழரும் - தமிழ்நாட்டு அரசியலில் மூத்த தலைவரும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால உறுப்பினருமான மதிப்பிற்குரிய என்.சங்கரய்யா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா உறுதியான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்  

சுதந்திரப் போராட்ட வீரராக, இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டக் களம் கண்டவராக, மாணவர்கள் அமைப்பைக் கட்டமைத்தவராக, பொதுவுடைமை இயக்கத்தின் போராளியாக, ஜனசக்தி - தீக்கதிர் ஏடுகளில் பொறுப்பு வகித்த பத்திரிகையாளராக, மக்கள் உரிமைக்காக சங்கநாதம் எழுப்பிய சட்டமன்ற உறுப்பினராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுச் செயலாளராக சங்கரய்யா அவர்களின் பொதுவாழ்க்கை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News