பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும்.. பெண் எம்.பி.க்கள் காேரிக்கை !!

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும்.. பெண் எம்.பி.க்கள் காேரிக்கை !!

Update: 2021-11-28 20:30 GMT

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டமாக்குவது தொடர்பாக பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

பாலியல் தொழில் பல நாடுகளில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் வரையறுக்கப்பட்ட வகையில் சட்டரீதியாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தொழில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் பல நாடுகளில் எதிர்ப்பு உள்ளது.  அந்த வகையில் தற்போது இலங்கையில் கோரிக்கை எழுந்துள்ளது. இலங்கையில் பாலியல் தொழிலை சட்டமாக்குவது தொடர்பாக பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்களில் சிலர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். சுற்றுலா நாடு என்ற விதத்தில் இலங்கையில் இரவு நேர பொருளாதாரம் அமல்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் என ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்று, தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.

இந்த நிலையில், இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் பாலியல் தொழிலுக்கு சட்ட ரீதியான அனுமதி வேண்டும் என பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களே இப்போது காேரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பாலியல் தொழில் புத்தர் காலத்திலிருந்தே காணப்படுவதாக ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்தார்.

அதே நேரத்தில், பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது இலங்கையில் புயலை கிளப்பி வருகிறது.  

newstm.in

Tags:    

Similar News