பறக்கும் விமானத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு கடும் தண்டனை !!

பறக்கும் விமானத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு கடும் தண்டனை !!

Update: 2022-01-31 17:16 GMT

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இந்திய வம்சாவளி நபருக்கு சிறை தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. 

அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீராஜ் சோப்ரா ( 41 ). இவர் விமானத்தில் பயணம் செய்த போது, தனது அருகே அமர்ந்திருந்த சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். பறக்கும் விமானத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதாவது, சிறுவன் தரப்பில் அளித்த புகாரில், சோப்ரா விமானத்தில் பயணம் செய்த போது, விமானத்தில் கொடுக்கப்பட்ட போர்வையை தன் உடம்பை முழுவதுமாக சுற்றி மூடியுள்ளார். மேலும் தனது அடுத்த இருக்கையில் அமர்ந்து பயணித்த சிறுவனின் மீதும் பாதி உடலை மூடும்படி போர்வையால் மூடியுள்ளார். பின்னர் சிறுவனின் அந்தரங்க பாகங்களை தொட தொடங்கியுள்ளார்.  

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன், அவரை கடுமையாக எச்சரித்துள்ளான். ஆனாலும் அவர் சீண்டல்களை நிறுத்தவில்லை, என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2019ம் ஆண்டு நடைபெற்ற நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது வந்தது. பின்னர் விசாரணையில் நீராஜ் சோப்ரா மீதான குற்றம் உறுதிபடுத்தப்பட்டது. 

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிமன்றம், 16 வயது மைனர் சிறுவனை பாலியல் சீண்டல் செய்ததற்காக அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை வழங்கியது. இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


  
newstm.in

Tags:    

Similar News