பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் தப்பியோட்டம் !!
பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் தப்பியோட்டம் !!
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அரசு நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் (50) பணியாற்றி வருகிறார். இவர் மீது பல்வேறு புகார்கள் ஏற்கனவே உள்ளன.
இந்த நிலையில் ஆசிரியர் ராஜமாணிக்கம், மாணவிகளிடம் ஆபாச புகைப்படங்களை காட்டி இரட்டை அர்த்த வார்த்தைகளால் பேசி பாலியல் தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து அரியலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் மாணவிகளிடம் விசாரித்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே, தன்மீது புகார் எழுந்ததை அறிந்த ஆசிரியர் ராஜமாணிக்கம் தலைமறைவானார். எனினும் அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக அடுத்தடுத்து புகார் எழுந்து ஆசிரியர்கள் சிக்கி வரும் நிலையில், தற்போது மேலும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in