டெல்லியில் 26ம் தேதி மூவர்ணக் கொடிக்கு அவமானம்! பிரதமர் மோடி வேதனை !!

டெல்லியில் 26ம் தேதி மூவர்ணக் கொடிக்கு அவமானம்! பிரதமர் மோடி வேதனை !!

Update: 2021-01-31 13:25 GMT

இன்று மன்கிபாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, டெல்லியில் கடந்த 26 ஆம் தேதி மூவர்ணக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானம் தேசத்திற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.

மன்கிபாத் நிகழ்ச்சி நாடு முழுவதும் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட  18 மொழிகளில், 33 வட்டாரங்களில் ஒலிபரப்பப்படுகிறது.  கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்ட மன்கிபாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அந்தவகையில், இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதில் யோகக்கலையிடம் இருக்கும் வல்லமை பார்த்த மக்கள் தற்போது யோகக்கலைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். 

நமது தடுப்பூசி திட்டம் உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக ஆகிவருகிறது. 15 நாட்களில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா போராளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிற்கு 18 நாட்கள் பிடித்துள்ளது. இதற்காக, பல்வேறு நாடுகளின் குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் இந்தியா குறித்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நபர்களை பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்வதோடு, உங்கள் குடும்பங்களிலும் இவளைப் பற்றி உரையாடலில் ஈடுபடுங்கள்: பிரதமர்

நமது ஒவ்வொரு முயற்சியும் நம்முடைய மன உறுதியை மெய்ப்பிக்கும். நாம் அனைவரும் இணைந்து இந்த ஆண்டினை பொருள் சார்ந்த ஒன்றாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார். 

மேலும்,மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் ஓவியர் சர்முதீன், ராமாயணம் தொடர்பாக அவர் வரைந்த ஓவியம் 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது என்றும், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ - பெங்களூரு இடையே 10,000 கிமீ இடைவிடாது விமானத்தைச் செலுத்தி 4 இந்திய பெண்கள் சாதனை படைத்தனர். அனைத்து துறையிலும் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும்  பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும்,ஹைதராபாத்தின் போயின் பல்லியில் உள்ள ஒரு காய்கறி சந்தை கழிவில் இருந்து நாள் ஒன்றுக்கு 500 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதோடு சுமார் 30 கிலோ உயிரி எரிபொருளும் தயாரிக்கப்படுகிறது. இதுதான் மாசில் இருந்து மாணிக்கம் - கழிவிலிருந்து செல்வம் பெறமுடியும் என்பதைநிரூபணம் ஆகியுள்ளது என்று தெரிவித்தார். 

மேலும், டெல்லியில் கடந்த 26 ஆம் தேதி மூவர்ணக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானம் தேசத்திற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் வேதனை தெரிவித்தார். 

75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் உங்கள் பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை புத்தகங்களில் எழுத இளைய நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இதுதொடர்பான தகவல்களை நீங்கள் கல்வி அமைச்சகத்தின் இணையதளத்தில் பெறலாம் என்றும்,  கடந்த ஆண்டு அசாதாரணமான சுயகட்டுப்பாடு மற்றும் மன உறுதியை வெளிப்படுத்தினோம். இந்த ஆண்டும் நமது கடும் உழைப்பு வாயிலாக மனவுறுதியை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். 

Tags:    

Similar News