அவளே சம்மதிச்சுட்டா... உனக்கென்ன? கள்ளக்காதலால் இளைஞர் வெறிச்செயல்!!

திருமணமான பெண்ணுடன் தவறான உறவு.. தட்டிக்கேட்ட பெட்டிக்கடைக்காரர் வெட்டிக்கொலை

Update: 2020-02-21 23:03 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தை அழகுராஜன்(40) என்பவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கமாக அருகில் இருக்கும் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலைக்கு சென்று தனது பெட்டிக்கடைக்கு பொருள்கள் வாங்கி வருவது வழக்கம். வழக்கம் போல அழகுராஜன் கழுகுமலை பஜாரில் பொருள்களை வாங்கி விட்டு, ஊருக்கு தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தீடீரென ஒருவர், அழகுராஜனை வழிமறைத்து தாக்கினார். மேலும் தான் வைத்திருந்த அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார்.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் கழுகுமலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே அழகுராஜன் உறவினர்கள் கழுகுமலை - சங்கரன்கோவில் சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியல் நடைபெற்று கொண்டு இருக்கும் போது, தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக சென்ற போது, அழகுராஜன் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுக்கையிட்டு முறையிட்டனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் காவல் துறையினரை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து முற்றுக்கையிட்டவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன், கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன், டி.எஸ்.பி.ஜெபராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இருந்தாலும் மக்கள் போராட்டத்தினை கைவிட மறுத்து வந்தனர். இதற்கிடையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கழுகுமலை கரட்டுமலையை சேர்ந்த கட்டிட தொழிலாளி மகேந்திரன்(27) என்பவர் கழுகுமலை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.  போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் மகேந்திரனுக்கும், ஆலங்குளத்தினை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் கள்ளத்காதல் இருந்துள்ளது. இது தொடர்பாக பிரச்சினை ஏற்பட அந்த கிராமத்தினை சேர்ந்தவர்கள் மகேந்திரனை அழைத்த அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இருந்தாலும் மகேந்திரன் அந்த பெண்ணின் பழக்கத்தினை கைவிடல்லை என்று தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட அழகுராஜன, மகேந்திரனை நேரில் எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். தன்னுடைய தொடர்புக்கு எதிரியாக இருக்கும் அழகுராஜனை ஆத்திரத்தில் கொலை செய்ததாக மகேந்திரன் தெரிவித்துள்ளார்.  இதையெடுத்து போலீசார் மகேந்திரனை கைது செய்தனர். மேலும் கொலை நடந்த இடத்தின் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்டவரும், கொலையாளியும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு ‌பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

Tags:    

Similar News