சீனாவில் இருந்து சென்னைக்கு கப்பலில் மருத்துவக் கழிவு வருகிறதா? துறைமுக நிர்வாகம் விளக்கம்

சீனாவில் இருந்து சென்னைக்கு கப்பலில் மருத்துவக் கழிவு வருகிறதா? துறைமுக நிர்வாகம் விளக்கம்

Update: 2020-01-31 15:56 GMT

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் உலக நாடுகள் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் மருத்துவக் கழிவுகளுடன் சீனக் கப்பல் ஒன்று சென்னை துறைமுகம் வந்துள்ளதாக தகவல் பரவியது.

இந்த தகவல் தமிழகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து துறைமுக நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சீன கப்பல் சென்னைக்கு வந்துள்ளதாக சில செய்தி பேப்பர்ஸ், தொலைக்காட்சிகளில் வெளியான செய்தி உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தகவல் அடிப்படையில் அதிகாரிகள் கப்பலில் ஆய்வு நடத்தியதாகவும் அதில் குறிப்பிடும்படி மருத்துவக்கழிவுகள் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

newstm.in

Tags:    

Similar News