பிரபல நடிகரை நேரில் சந்தித்த ஷிவானி.. வைரலாகும் புகைப்படம் ! படத்தில் நடிக்க வாய்ப்பா?

பிரபல நடிகரை நேரில் சந்தித்த ஷிவானி.. வைரலாகும் புகைப்படம் ! படத்தில் நடிக்க வாய்ப்பா?

Update: 2021-07-07 07:41 GMT

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் பிரபலமானாவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். இதனால் மேலும் பிரபலமானார். ஆனால் திரைப்படங்களில் நடிப்பதற்காக சீரியல்களில் இருந்து வெளியேறினார்.

கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4ஆவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். எனினும் அவருக்கு பெரியளவில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்றபோதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாள்தோறும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கரங்கடித்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களையும் பதிவேற்றம்  செய்கிறார். இதனால் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்த நிலையில் நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்துள்ளார். மேலும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அவர் விஜய் சேதுபதியை சந்தித்தது ஏன் டாபிக் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகியுள்ளது. 

இதுவரை பெரியளவில் படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லாத நிலையில், விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ஷிவானி நாராயணன் நடிக்க போகிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். எனினும் இது குறித்து எந்த தரப்பும் அறிவிப்பு வெளியிடவில்லை.

newstm.in

Tags:    

Similar News