அதிர்ச்சி! கொரோனாவுக்கு 10 நாள் தனிமை போதாது!!

அதிர்ச்சி! கொரோனாவுக்கு 10 நாள் தனிமை போதாது!!

Update: 2022-01-17 06:30 GMT

கொரோனா குறித்து பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளது.

அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10இல் ஒருவருக்கு 10 நாட்களுக்கு பிறகும் தொற்றின் பாதிப்பு நீடித்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையில் தொற்று உறுதியான 176 பேரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்யப்பட்ட பிறகே வைரஸின் நிலை தெரிய வந்திருக்கிறது.

அதன்படி பாசிட்டிவ் மாதிரிகளை ஆர்.என். அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புதிய சோதனையில், தனிமைப்படுத்தப்பட்ட 10 நாட்களுக்கும் மேலாக வைரஸ் நீடித்திருப்பது கண்டறியப்பட்டது.

13 சதவிகித பேரின் உடலில் குறிப்பிட்ட காலவரையறைக்கு மேல் கொரோனா உயிர்ப்புடன் இருப்பது தெரிய வந்திருக்கிறது. கொரோனா வைரஸ் போய்விட்டது என அலட்சியமாக இருக்கக் கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்படி வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும்பட்சத்தின் இதனால் பலருக்கும் பரவி ஆபத்து ஏற்படக் கூடும் என மருத்துவ பேராசிரியர்கள் கூறுகின்றனர். எனவே 10 நாள் தனிப்படுத்தும் முறை போதுமானதாக இருக்காது என ஆய்வு முடிவு மூலம் தெரியவருகிறது.

newstm.in

Similar News