அதிர்ச்சி! முதியவரை கொலை செய்த 2 சிறுமிகள்!!
அதிர்ச்சி! முதியவரை கொலை செய்த 2 சிறுமிகள்!!
கேரளாவில் முதியவரை வெட்டிக் கூறுபோட்டு காட்டுக்குள் புதைத்த சிறுமிகள் இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
வயநாடு மாவட்டம் ஆயிரம் கொல்லி என்ற பகுதியை சேர்ந்த முகமது (70) என்பவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி உடல் நலம் பாதித்து நடமாட முடியாமல் சிகிச்சை பெற்று வருவதால், அவரை கவனித்துக் கொள்ள நிலம்பூர் என்ற இடத்தில் இருந்து ஒரு பெண்ணை முகமது அழைத்து வந்தார்.
வீட்டு வேலைக்கு வந்த பெண்மணிக்கு 13 வயது மற்றும் 15 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அவர்களும் அந்த வேலைக்கார பெண்மணியுடன் முகமது வீட்டிலேயே தங்கி இருந்தனர். சம்பவத்தன்று இரண்டாவது மனைவி வெளியூர் செல்ல நேர்ந்தது. அப்போது முகமது வேலைக்கு சேர்ந்த பெண்மணியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
இதை அறிந்த அவரது இரு மகள்களும் தடுக்க முயன்றனர். இதில் கோபம் அடைந்த முகமது சிறுமிகளை அடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமிகள் அங்கே இருந்த ஒரு கோடாரியை எடுத்து முகமதுவின் தலையில் அடித்தனர்.
முகமது இறந்ததை அறிந்து தாய் மற்றும் சிறுமிகள் மூவரும் சேர்ந்து ஒரு சாக்கு மூட்டையில் முகமது உடலை கட்டி ஒரு குழியில் போட்டு மறைத்து வைத்தனர். பின்பு சிறுமிகள் சுல்தான் பத்தேரி காவல் நிலையத்துக்குச் சென்று சரண் அடைந்தனர்.
ஆனால் இந்த கொலையை சிறுமிகள் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், தனது உறவினர்கள் செய்திருப்பார்கள் என முகமதுவின் இரண்டாவது மனைவி தெரிவித்துள்ளார். இதனால் போலீஸார் குழப்பம் அடைந்துள்ளனர்.
வேலைக்கார பெண்மணியை கைது செய்த போலீஸார் இரண்டு சிறுமிகளையும் அங்குள்ள குழந்தைகள் காப்பக மையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
newstm.in