அதிர்ச்சி! தொழிலதிபர் வீட்டில் 850 சவரன் நகை கொள்ளை!!

அதிர்ச்சி! தொழிலதிபர் வீட்டில் 850 சவரன் நகை கொள்ளை!!

Update: 2021-12-28 06:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிநாட்டில் வசிக்கும் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 850 சவரன் நகைக் கொள்ளையடிக்கப்பட்டது.

மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் புருணை நாட்டில் பல ஆண்டுகாலமாக தங்கி சொந்தமாக 8 சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினத்தில் உள்ள அவரது சொந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அருகே இருந்தவர்கள் இது குறித்து அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது வீட்டில் 850 பவுன் நகை இருந்ததாகவும் அவை அனைத்தும் கொள்ளைபோனதாகவும் ஜாபர் சாதிக்கின் உறவினர் முகமது உசேன் என்பவர் மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், கொள்ளைச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News