அதிர்ச்சி! நடிகர் மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதி!
அதிர்ச்சி! நடிகர் மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதி!
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நாடு முழுவதுமே கொரோனா தொற்று 3ம் அலை பெரிய அளவில் பரவி வருகின்றது. இந்நிலையில், கொரோனா பரவலலால் திரையுலகினர் பெருமளவில் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
நடிகர் சத்யராஜ், பிருத்விராஜ், மகேஷ்பாபு, நடிகைகள் த்ரிஷா, நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், இயக்குநர் அருண் வைத்தியநாதன், இசையமைப்பாளர் தமன் போன்றோர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நடிகர் மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மம்முட்டி தற்போது நடித்து வரும் சிபிஐ 5 படத்தின் படப்பிடிப்புகள் இதனால், பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். நடிகர் மம்முட்டி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 70 வயதான நடிகர் மம்முட்டி, சமீபத்தில் தனது கல்லூரி நண்பர்களை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.