அதிர்ச்சி! ஒமைக்ரானால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு!!
அதிர்ச்சி! ஒமைக்ரானால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு!!
ஒமைக்ரானால் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம் என்பதால் அவர்களுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
குழந்தைகளில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொள்ளும் செல்கள் வளராமல் இருப்பதால் அவர்களுக்கு ஒமைக்ரான் தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் அதிக குழந்தைகளுக்கு தொற்று உலக அளவில் பரவி வருகிறது.
தென் ஆப்பிரிகாவில் ஆல்பா, டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை விட ஒமைக்ரான் தொற்றுக்கு அதிக குழந்தைகள் ஆளாகி வருகின்றனர்.
ஒமைக்ரான் அதிகம் பரவும் தன்மைதன்மை கொண்டதாலும் இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கவில்லை என்பதாலும் குழந்தைகளிடம் தொற்று அதிகம் பரவலாம் என தொற்று நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்டாவினால் 100 பேருக்கு பாதிப்பு என்றால் ஒமைக்ரான் 500 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். தீவிர பாதிப்பு குறைந்த நபர்களுக்கே ஏற்படும் என்றாலும் அதன் எண்ணிக்கையும் கடந்த அலைகளை விட அதிகமாக இருக்கலாம்.
எனவே உடனடியாக குழந்தைகளுக்கு தடுப்பூசி அறிமுகப்படுத்த வேண்டும். அதே போன்று பூஸ்டர் டோஸ்களும் போட்டால் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த தொடங்க வேண்டும். ஒமைக்ரான் அதிகம் பரவினால் மீண்டும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். அதனால் அவர்களுக்கு தடுப்பூசி அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in