அதிர்ச்சி! காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

அதிர்ச்சி! காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

Update: 2021-04-20 16:11 GMT

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு லேசான கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும், பரிசோதனை முடிவில் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 


மேலும் அந்த ட்விட்டர் பதிவில், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவருமே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும், தனிமைப்படுத்திக் கொள்ளுதல் உட்பட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி, வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு,  சிகிச்சை பெற்று வருவதாக காங்கிரஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மேற்குவங்கத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென தனது பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News