அதிர்ச்சி! ஒரே நாளில் 11,000யை நெருங்கிய கொரோனா பாதி்ப்பு!
அதிர்ச்சி! ஒரே நாளில் 11,000யை நெருங்கிய கொரோனா பாதி்ப்பு!
தமிழகத்தில் கொரோனா 2வது அலை முதல் அலையை காட்டிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய,மாநில அரசுகள் செயல்படுத்தி வந்த போதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,986 பேர்.
இதில் சென்னையில் மட்டும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,711 பேர். இன்று தமிழகம் முழுவதும் செய்யப்பட்ட மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 10,13,378 பேர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,20,369 பேர். தமிழகத்தில் கொரோனா காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 பேர் .இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,205 பேராக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,02,392 பேர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,14,119 பேர்.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 79,804 பேர்