அதிர்ச்சி! திமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! கலக்கத்தில் ஸ்டாலின்!
அதிர்ச்சி! திமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி! கலக்கத்தில் ஸ்டாலின்!
பத்மநாமபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் இதுவரையிலான பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. நேற்று ஒரே நாளில் 288 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 17,056 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 20,037 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் பத்மநாமபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், மேலும் இன்னொரு எம்.எல்.ஏ.வுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது உடன்பிறப்புகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அடுத்தடுத்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருவது முதல்வர் ஸ்டாலினைக் கலக்கமடைய செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் பாதுகாப்பாக மக்கள் பணியில் கவனமுடன் ஈடுபடுங்கள் என்று சொல்லி வருகிறாராம்.